மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


சற்றுமுன் மேட்டூர் அணை திறப்பு!!!

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. இதையடுத்து இன்று முதல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

மேலும், மேட்டூர் அணை தொடர்பில் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணை நீர் திறப்பு மூலம் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி குளங்களில் நீர் நிரப்பப்பட்டு அதன் மூலம் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும். கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் மூலம் நீர் மேலாண்மை செய்து நீரை பாசனத்திற்கு பயன்படுத்துமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந் நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகளும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.