இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து இருந்து வெளியேறும் நபர் இவர்தானாம்;

இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து இருந்து வெளியே போவது இவர்தான்,நீங்கள் நினைப்பது போல் சாக்ஷி இல்லை என தெரிவிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் யார் என்பது பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் சாக்ஷி, கவின், மதுமிதா,அபிராமி , மற்றும் ரேஷ்மா எவிக்ஷன் பட்டியலில் உள்ளனர்.


அவர்களில் மதுமிதா நேற்றையதினம் காப்பாற்றப்பட்டதாக தொகுப்பாளர் கமல் நேற்றைய எபிசோடில் அறிவித்துவிட்டார். இந்நிலையில் தற்போது ரேஷ்மா பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது.

கவின் அல்லது சாக்‌ஷி ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்இ யாருமே எதிர்பார்க்காத இந்த ட்விஸ்ட் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது .

பிக்பாஸில் பங்கேற்றுள்ள சாக்ஷி நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் அடுத்தவரை போட்டுக்கொடுத்தும், சில விஷயங்களை திரித்துக் கூறுவதையுமே தொழிலாக கொண்டுள்ளார். முதுகில் குத்துவதிலும் பின்னால் பேசுவதிலும் வல்லவராக திகழ்ந்து வருகிறார் சாக்ஷி.

இதனால் அவரை பாய்சன் என்றே அழைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். குறிப்பாக மீரா மிதுன் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களை வெறுப்படைய செய்துவிட்டது.

ரேஷ்மாவுடன் க்ளோஸாக இருந்தபோதும் அவர் குறித்து பின்னால் பேசி வந்தார் சாக்ஷி. தனது நெருங்கிய தோழியான அபிராமி, கவினை காதலிப்பது தெரிந்த பிறகும் கவினை காதலித்தார்.

ஆனால் அந்த காதல் நினைத்தது போல் இல்லை. கர்மா லாஸ்லியா ரூபத்தில் வந்து பூமராங் ஆட்டம் காட்டியது. இதனால் காதல் தோல்வியில் காயம்பட்டுள்ளார் சாக்ஷி,

சாக்ஷிதான் பிக்பாஸ் வீட்டின் பல பிரச்சனைகளுக்கும் காரணம் என பார்வையாளர்கள் குற்றம் சாட்டினர். இதனால் எப்போது சாக்ஷி நாமினேஷனுக்கு வருவார் என எதிர்பார்த்திருந்தனர் பார்வையாளர்கள்.

கடந்த வாரமே நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்த சாக்ஷி வெளியேற்றப்பட்டு விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரே நாளில் தனது அவசர புத்தியால் சேரன் மீது தவறான குற்றச்சாட்டைக் கூறி சாக்ஷிக்கு விரிக்கப்பட்ட வலையில் வான்டட்டாக விழுந்து வெளியேறினார் மீரா மிதுன்.

இதனால் கடந்த வாரம் தப்பித்தார் சாக்ஷி. சரி இந்த வாரம் லிஸ்ட்டில் இருக்கிறார் வெளியேற்றிவிடலாம் என காத்திருந்தனர் பார்வையாளர்கள். ஆனால் கவினின் முக்கோண காதலால் சாக்ஷி மீது மக்களுக்கு கொஞ்சம் பரிதாபம் ஏற்பட்டுவிட்டது.

இதனாலோ என்னவோ இந்த வாரமும் சாக்ஷி காப்பாற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் சாக்ஷி காப்பாற்றப்பட்டு எதிர்பாராதவிதமாக ரேஷ்மா வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேஷ்மா தன்னை நியூட்ரல் என கூறுவாரே தவிர ஒருபோதும் அவர் நியூட்ரலாக இருந்ததே இல்லை. முழுக்க முழுக்க ஜால்ரா தான். 

மேலும் எது எப்படியோ இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் வீட்டை விட்டு கிளம்பும் போது முகெனை சாமியாடிவிட்டுதான் செல்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பொறுத்திருப்போம் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக இன்று இரவு வரை காத்திருப்போம்.

No comments

Powered by Blogger.