மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை:வான் கதவுகள் திறப்பு!!!

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக களனி ஆற்றை அண்மித்த பகுதியில் வசிப்பவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, நுவரெலியா, ஹட்டன், கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.