ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணையும் வடக்கின் முக்கியஸ்தர்.

முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்கள் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளப் போகிறேன் என முன்னாள் வட மாகாண ஆளுநரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எனும் வாகனத்தில் பயணிக்க ஏறியுள்ளவர்கள்இ ஒவ்வொரு தரிப்பிடத்திலும் நால்வர், ஐவர் என இறங்கிக் கொள்கின்றனர். எமக்கு இப்போது இணைந்துகொள்ள முடியுமான ஒரே முகாம் கோட்டாபய ராஜபக்ஸவினுடையது மாத்திரமே எனவும் தெரிவித்தார்.
Gator Website Builder