உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் திறப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி ஹரிசன் அவர்களினால் உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் அண்மையில் மக்களின் பாவனைக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், நீர்ப்பாசன திணைக்களத்தின் ஆணையாளர் வீரசேகர, மாவட்ட செயலாளர் மோகனதாஸ், கமநல திணைக்கள அதிகாரிகள், விவசாய திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து இந்நிகழ்வில் கொண்டனர்.
No comments

Powered by Blogger.