26 ஆம் 27 ஆம் திகதிகளில் தொழிற்சங்க போராட்டம்...


Image result for trade union srilankaபல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.

வேதன பிரச்சினை மற்றும் கற்பிக்கும் காலத்தில் சுதந்திரத்திற்கு இடையூறு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்களின் 30 தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளன.

இதேவேளை, பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள தொடர்ச்சியான போராட்டம் இன்று நான்காவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக கல்விசார ஊழியர் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு அதிகாரிகள் உரிய பதில் வழங்காவிடின் போராட்டம் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் எச்சரித்துள்ளது.
Gator Website Builder