நாளை தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு;யாழ் மாநகரசபை அழைப்பு


தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாவும் யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெறும்.

அந்த வகையில் ஆரம்ப நாள் நிகழ்வு எதிர்வரும் 15.09.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபன் உண்ணாவிரத்ததை ஆரம்பித்த நேரமான காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் நடைபெறும்.

எனவே அஞ்சலி செலுத்தவரும் சகலரும் குறித்த நேரத்திற்கு அரை மணித்தியாளங்களுக்கு முன்பாகவே (9.00 மணிளயவில்) நினைவுத்தூபிக்கு முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வின் நினைவுச் சுடரினை எமது மக்களுக்காக உயிர்நீர்த்த மாவீரர்களின் பெற்றோரகளில் ஒருவர் ஏற்றிவைப்பார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் தமது அஞ்சலிகளை செலுத்துவர்.

மேற்படி உணர்வுபூர்வமான ஆரம்ப நினைவு நாள் நிகழ்வில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக அணிதிரண்டு நம் ஒற்றுமையை வெளிப்படுத்தி நிற்போமாக என பகிரங்க அழைப்பு விடுகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.