ஜனாதிபதி வேட்பாராக களமிறங்கும் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை- சஜித்

ஜனாதிபதி வேட்பாளர் போராட்டத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பங்கேற்ற விசேட மாநாடு கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  தான் பின் கதவால் வேட்பாளராகுவதற்கு கீழ்த்தரமானவர் கிடையாது எனவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

இதுதவிர தான் ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தன்னை அரச மாளிகைகளில் காண முடியாது எனக் குறிப்பிட்ட அவர் மாறாக மக்களுடன் பொது இடங்களிலேயே காண முடியும் எனவும் கூறினார்.

இந்த நிலையில் தான் ஜனாதிபதி வேட்பாராக களமிறங்கும் நிலைப்பாட்டிலிருந்து ஒரு அடியேனும் பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.