வவுனியாவில் தையற்பயிற்சியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தேசிய வடிவமைப்பு நிலையத்தினால் வவுனியா மாவட்டத்தில் நடாத்தப்பட்ட தையற்பயிற்சியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன், தேசியக வடிவமைப்பு நிலையத்தின் பணிப்பாளர் எம் ஏ சந்திரசிரி, பயிற்சிநெறி பொருப்பாளர் ஜிப்ரியா, அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி முத்து முஹம்மது, நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் உட்பட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post