இலங்கையின் சட்டமும் நீதியும் பெரும்பான்மை இனத்திற்கும் மதத்திற்கு மட்டும்தானா? - மு.சந்திரகுமார்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தின் உள்ள குருகந்த புராண ரஜமகா பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தியின் உடல் தகனம் செய்த விவகாரத்தில் நீதி மன்ற உத்தரவு அப்பட்டமான மீறப்பட்டுள்ளது. இது இந் நாட்டின் சட்டத்தின் மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேய்வது போன்று இன்றை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தவேண்டியவர்கள் காவல்துறையினர் ஆனால் இன்று அந்தக் காவல்துறையினரே நீதி மன்ற உத்தரவை மீறுவதற்கு உடந்ததையாக நிற்பதனை அவதானித்துள்ளோம். காவல்துறையினரின் பாதுகாப்புடன் நீதி மன்ற உத்தரவு மீறப்பட்டு பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் இனங்களுக்கிடையேயான நல்லிணக்க முயற்சிகள் முழுமையாக கட்டியெழுப்படாத சூழ்நிலையில் இது போன்ற செயற்பாடுகள் நாட்டை ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு செல்லாது என்பது கவலைக்குரிய விடயம்.

ஏழைத் தோட்டத் தொழிலாளியின் உடவலை அடக்கம் செய்த விவகாரத்தில் பிரதி அமைச்சர் பாலித தேவபெரும நீதி மன்ற உத்தரவை மீறிவிட்டார் என அவரை சிறைக்கு அனுப்ப முடியும் என்றால் அதே நீதியும் சட்டமும் இன்றைய சம்பவத்தின் போது நீதி மன்ற உத்தரவை மீறியவர்களுக்கும், அதற்கு உடந்தையாக நின்ற காவல்துறையினருக்கும் என்ன செய்யப் போகின்றது? இலங்கையின் சட்டமும் நீதியும் பெரும்பான்மை இனத்திற்கும், மதத்திற்கு மட்டும்தானா? என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post