அனுராதபுர காட்டுக்குள் மர்மமான முறையில் செத்துக் கிடக்கும் யானைகள்? பின்னணி குறித்து வெளியான தகவல்

Image result for அனுராதபுரத்திலுள்ள காட்டுப்பகுதியில் மர்மமான உயிரிழந்த யானைகள் தொடர்பில்அனுராதபுரத்திலுள்ள காட்டுப்பகுதியில் மர்மமான உயிரிழந்த யானைகள் தொடர்பில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவரின் சாந்தி பூஜைக்காக யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


ஹபரன, துன்மிகுளம் காட்டுப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

யானைகளின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்னும் பல யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இராணுவத்தினரும் வனவிலங்கு அதிகாரிகளும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை கடும் போட்டியாளராக எண்ணும் மற்றைய போட்டியாளரின் நன்மைக்காக இந்த யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆட்சியின் போது குட்டி யானை ஒன்றை வீட்டில் வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் கோத்தபாய ராஜபக்ஷ சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post