மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


பிரத்தியேக வேட்பாளர்...


Image result for chandrika kumaratungaசிறிலங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி தேர்தலில் பிரத்தியேக வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது சிறப்பான விடயம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவயில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சுதந்திர கட்சியின் சார்பில் பிரத்தியேகமாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று, அதன் பொது செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சந்திரிக்காவிடம் கேட்ட போது, அவ்வாறு பிரத்தியேக வேட்பாளர் ஒருவர் களமிறக்க தீர்மானிக்கப்படுமானால், அது சிறந்த முடிவாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.