'எங்கள் வீதி எங்கள் பாதுகாப்பு' என்னும் தொனிப்பொருளில் வடமாகாண வீதி பாதுகாப்பு வாரம்.

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை 'எங்கள் வீதி எங்கள் பாதுகாப்பு' என்னும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள வடமாகாண வீதி பாதுகாப்பு வாரம் தொடர்பிலான ஊடக சந்திப்பு நேற்றையதினம் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பின் போது வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதிப்போக்குவரத்துக்களை கட்டுப்படுத்தும்நோக்கோடு வடமாகாணத்தில் உள்ள வீதிகள் பொதுமக்களின் பாவனைக்கு உகந்தனவாக உள்ளதா என்றும் அவற்றை எவ்வாறு மாற்றியமைக்கவேண்டும் என்பதுடன் விபத்து நடப்பதற்கான காரணிகள் என்ன என்பதை பல்கலைக்கழகங்கள் , வைத்தியர் மற்றும் பொலிஸ் ஆகியோரிடன் ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் தலைக்கவசம் மற்றும் மோட்டார் வாகன பிரயாணத்தின்போது அணியும் ஜக்கட் என்பனவற்றில் இரவு பயணத்தின்போது எதிரே வருபவர் அறிந்துகொள்ளும் வகையில் ஒளியூட்டப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் தொடர்பில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதுடன் வீதி பாதுகாப்பு வாரத்தின் ஏழு நாட்டிகளில் ஐந்து மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு விடயங்களாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை பாடசாலைகள் ,சாரதிகள், நடத்துனர்கள் என மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.

இதேவேளை , வடமாகாணத்தில் முழுநேர ஊடகவியலாளராக செயற்படுபவர்களுக்கு தொழில் ரீதியான சான்றிதழ் வழங்கப்படும் என்பதுடன் அவர்களுக்கு காப்புறுதி வசதிகளும் , குறைந்த வட்டிவீதத்தில் வடமாகாணத்தின் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினூடாக வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஊடகசந்திப்பில் வடமாகாண வீதி பாதூகாப்பு சபையின் பிரதானி டாக்டர் கோபி சங்கர் குறிப்பிடுகையில்,

இந்த வீதி பாதுகாப்பு வாரத்தில் அனைத்து பாடசாலைகளிலும் போக்குவரத்து கழங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன் அவர்களுக்கான பயிற்சிகள் பொலிஸாரினால் வழங்கப்படவுள்ளது. பாடசாலை மட்டத்தில் மத்தியபிரிவுக்குட்பட்டவர்களுக்கு பேச்சு போட்டிகள் , கருத்தரங்குகள், வீதிக்கு வெல்வோம் என்னும் தொனிப்பொருளில் வீதி நாடகம் என்பன வடமாகாணத்தின் வலயமட்டங்களில் நடத்த திட்டமிடப்படுள்ளது. இதில் வெற்றிபெறுபவர்களுக்கான பரிசில்கள் இறுதி நாளில் வழங்கப்படவுள்ளன என்று குறிப்பிட்டார்.

மேலும் பொதுமக்களுக்கான வீதிவிபத்து தொடர்பிலான குறுப்படப்போட்டிகள் ,விவரணப்படம், மீம்ஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மற்றும் சாரதிகளுக்கு மருத்துவ முகாம் வீதிவிபத்துக்களால் வரும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு முகம்கொடுத்தல் என்பது தொடர்பில் அடிப்படை முதலுதவி பயிற்சி முகாம் வைத்தியர்களுடன் இணைந்து நடாத்தப்படவுள்ளதுடன் , எல்லா மாவட்டங்களிலும் ஆரம்ப நாளில் நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்டத்துறை சார்ந்த விழிப்புணர்வுகளும் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவுள்ளது. 

மேலும் மாநாகர சபைக்குட்பட்ட இடங்களில் வீதித்தடை அமைக்கப்படவேண்டிய இடத்தில் வீதித்தடை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த வாரத்தில் SLS சான்றிதழ் பொருத்தப்பட்ட தலைக்கவசம் குறைந்த விலையில் விசேட விலைக்கழிவில் வழங்கப்படவுள்ளதுடன், வீதி பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இணையத்தளம் ஓன்றும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் திருமதி எஸ் . சுஜீவா கலந்துகொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post