நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாருக்கு இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள்..

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலின் தேர்த்திருவிழா இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றது.

பஞ்சமுக விநாயகர் ஒரு தேரிலும் சுப்பிரமணியர் இன்னொரு தேரிலும் சண்டேசுவரர் சிறிய தேரிலும் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

தேர் திருவிழாவின் போது கோயிலை நிர்மாணித்த யாழ்ப்பாண அரச வம்ச முதலமைச்சர் அரசகேசரிக்கு (உருவச்சிலைக்கு) வரவேற்பு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இன்றைய தேர்த் திருவிழாவின் விசேட அம்சமாக நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாருக்கு இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் பக்தர்களால் சிதறு தேங்காய்களாக அர்ப்பணிக்கப்பட்டமை சிறப்பான அம்சமாகும்.Gator Website Builder