மக்கள் விடுதலை முன்னணியால் நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சுனில் ஹந்துன்நெத்தியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் குமாரபுரம் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வினை மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் கந்தசாமி பிரபு ஏற்பாடு செய்திருந்தார்.

இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் அருண் ஹேமசந்திரா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்களும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

No comments

Powered by Blogger.