ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு இன்று!!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்குவது குறித்து இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் இது குறித்து தீர்மானிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யும் செயற்குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்றைய தினம் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
செயற்குழுக் கூட்டம் எத்தனை மணிக்கு நடைபெறும் எந்த இடத்தில் நடைபெறும் என்பது குறித்து இதுவரையில் தமக்கு  அறிவிக்கப்படவில்லை என சஜித் பிரேமதாச இன்று காலை தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் தெரிவிற்கு செயற்குழு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினை கூட்டுமாறு சஜித் பிரேமதாச ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளார்.
எவ்வாறெனினும், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் செயற்குழுவினால் மட்டும் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் செயற்குழுக் கூட்டம் மட்டுமே இன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு இன்று மாலை 5.00 மணிக்கு கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post