சந்திரகாந்தன் தலைமையிலான ஆசிரியர் தொழிற் சங்கம் உதயம்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆசிரியர் தொழிற்சங்கமானது அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கல்வித்துறை சார்ந்த பலர் கலந்துகொண்டதுடன். கிழக்கு தமிழ் மக்கள் விடுதலை ஆசிரியர் முன்னணி எனும் பெயரில் ஆசிரியர் தொழிற்ச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கிலே பலமான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது. கிழக்கின் கல்வித்துறையை துரித வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல பல திட்டங்களை முன்னெடுத்து வந்ததை யாவரும் அறிவர். அதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்குடன் கட்சிக்கான ஆசிரியர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சங்கத்தின் மூலம் கிழக்கிலங்கை ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மாத்திரமன்றி கிழக்கின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

0/Post a Comment/Comments

Previous Post Next Post