ரணில் சஜித் இருவரும் ஒரே குடும்ப தந்தை மகன் போன்ற உறவுகளே!!

அமைச்சர் சஜித் பிரேமதாச உட்பட அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வரவே பாடுபட்டு வருகின்றனர் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று சந்திக்க உள்ளனர். அவர்கள் இருவரும் தந்தையும் மகனையும் போன்றவர்கள். அவர்களுக்கு இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி, போட்டி களத்திற்கு வருவார்கள். விரைவாக போட்டி களத்திற்கு வர வேண்டும் என்பதே எமது தேவை எனக் கூறியுள்ளார்.

அதேவேளை அமைச்சர் கபீர் ஹாசிமுக்கும் அமைச்சருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள கிரியெல்ல, கபீர் தனது சிறந்த நண்பர் எனவும் அவருடன் எந்த மனஸ்தாபமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.