மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் இருந்த திருடர்களுக்கு உரிய பாடத்தைப் புகட்டுவோம்-ஹேசா விதானகே.

சஜித் பிரேமதாசவின் ஆட்சி வந்ததும் கடந்த மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இருந்த திருடர்களுக்கு உரிய பாடத்தைப் புகட்டுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தின் சஜித் வரவேற்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
கடந்த அரசாங்கத்தில் இருந்த மோசடிக் காரர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கூறினோம். அதற்கு அப்போதிருந்த அமைச்சர்களும் முட்டுக்கட்டை போட்டனர். கோட்டாபய ராஜபக்ஸவை காப்பாற்றிக் காப்பாற்றி வந்த போதிலும் புதிய அரசாங்கத்தின் கீழ் அவருக்கு ஜம்பர் அணிவிப்போம் எனவும் ஹேசா தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post