ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக் கூட்டம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக் கூட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், ஏ.எல்.நஸீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹம்மட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், உயர் பீட உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.


0/Post a Comment/Comments

Previous Post Next Post