மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


காரைக் கவியின் நூல் வெளியீட்டு விழா.

யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த காரைக்கவி கந்தையா பத்மானந்தன் (திட்டப்பணிப்பாளர், அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டம்) அவர்களின் நூல் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.31 மணியளவில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேனாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு.கனகரத்தினம் அரசரத்தினம் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கௌரவ கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசம் அவர்களும், கௌரவ விருந்தினராக விசேட பிராந்தியங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அலிசாஹிர் மௌலானா செயிட் மற்றும் நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி செயிட் மொகம்மட் சிஹாப்தீன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


No comments

Powered by Blogger.