புதிய பாதையில் நவீன தொழிநுட்ப இலங்கையை உருவாக்கிக்காட்டுவேன்-சஜித்

மக்களை கொலைசெய்து ஆட்சி செய்ய நான் ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தண்ணீர் கேட்ட மக்களை கொன்றவர்களும், வீடுகள் கேட்டவர்களை வீட்டை விட்டு விரட்டியடித்த ஆட்சியாளர்கள் தான் இன்று மீண்டும் தேர்தலில் போட்டியிட வந்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

அவர்களுக்கு இனியும் இடமளிக்க முடியாது. மக்களை பாதுகாப்போம், கட்டியெழுப்புவோம் எனும் கொள்கையே நான் எப்போதும் உள்ளேன். புதிய பாதையில் நவீன தொழிநுட்ப இலங்கையை நான் உருவாக்கிக்காட்டுவேன். ஒரு நாட்டின் தலைவராக வா வேண்டியவன் நாட்டில் சகல மக்களையும் சந்தித்து அனைவர் முன்னிலையிலும் பேச தெரிந்திருக்க வேண்டும். அதனை நான் செய்து வருகின்றேன்.

நாட்டினை ஆட்சி செய்வது என்பது இயந்திர ஆட்சியோ இராணுவ ஆட்சியோ அல்ல. மக்கள் முன்னிலையில் சென்று அவர்களின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு சேவை செய்யும் ஆட்சியை செய்ய வேண்டும். அந்த தகுதி என்னிடம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post