மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவு தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திர.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த  ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர,

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது என தெரிவித்தார்.

மேலும் எல்பிட்டி தொகுதி என்பது மிகச்சரியாகக் கூறுவதென்றால் மத்திய கொழும்பு ஆசனத்தைப் போன்றதாகும். எந்தவொரு அரசாங்கத்திலும் மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே வெற்றிபெற்றிருக்கிறது.

அதேபோன்று எல்பிட்டி தொகுதியில் எதிரணியினர் தான் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

நாங்கள் அந்தத் தொகுதியில் தோல்வியடைவோம் என்பதும் அறிந்த விடயமே. எனினும் சிறியளவிலான இந்தத் தேர்தலை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.