செஞ்சோலை வளாக குடியிருப்புக்கு ரெலோ இளைஞர் அணியினர் விஜயம்.

கிளிநொச்சியில் உள்ள செஞ்சோலை வளாகத்திற்கு நேற்றையதினம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) இளைஞர் அணி செயலாளர் சபா.குகதாஸ் தலைமையிலான இளைஞர் அணியினர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதன் அவர்களும் நேரில் சென்று கள நிலவரங்களை அவ் வளாகத்தில் வசிக்கும் மக்களோடு கலந்துரையாடியுள்ளார்கள்.

மேலும் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் குடியிருக்கும் செஞ்சோலையில் வளர்ந்த பிள்ளைகளின் குடும்பங்களை குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறுங்கள் என கரைச்சி பிரதேச செயலகம் காலக்கெடு வழங்கி நோட்டீஸ் ஒட்டி உள்ளமை தொடர்பாக இச் சம்பவத்தின் முழு விடயத்தையும் ஆராய்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2003 ம் ஆண்டு செஞ்சோலைக்குரிய காணி உரிமையாளர்கள் அதனை அன்றைய நிர்வாகத்தினரிடம் விற்றதாகவும் மீண்டும் யுத்தம் முடிவடைந்து மீள் குடியேறியதன் பிற்பாடு பதில் காணிகளை வேறு இடங்களில் பெற்றுக் கொண்டு வீட்டுத்திட்டம் மூலம் வீடுகளைப் பெற்று வாழ்வதாக நிர்வாக செயலகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் பதில் காணிகளையும் வீடுகளையும் பெற்றுக் கொண்டு வாழ்பவர்கள் மீண்டும் செஞ்சோலைக் காணிகளுக்கு உரிமை கோருவது மனிதாபிமானமற்ற செயல் எனவும் கரைச்சி பிரதேச செயலகம் வெளியேற்றும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் உரிய நியாயம் வழங்கப்படாது விட்டால் ஜனநாயக வழியில் காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை எமது இளைஞர் அணி முன்னேடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post