டிஜிற்றல் பதாகைகளைக் காட்சிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரையோ அல்லது கட்சியையோ ஊக்குவிப்பதற்காக வீதி ஓரங்களில் எண்மான (டிஜிற்றல்) பதாகைகளைக் காட்சிப்படுத்துவது, திரையரங்குகளில் விளம்பரப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பரப்புரைகளுக்காக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளல் மற்றும் பரப்புரைகளை மேற்கொள்ளல் என்பன தேர்தல் சட்டத்துக்கு அமையக் குற்றமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post