ரோஹித்த போகொல்லாகமவின் ஆதரவு சஜித் பிரேமதாசவிற்கு.

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இன்று தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள சஜித் பிரேமதாசவின் தேர்தல் அலுவலகத்திற்கு சென்ற ரோஹித்த போகொல்லாகம, ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநராக தாம் செயற்பட்டதன் அடிப்படையில், கிழக்கில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்ற புரிந்துணர்வு தமக்கு இருப்பதாக ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post