களுதாவளை கடலில் காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் தீவிரம்!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல்போன இளைஞனை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் டிலான்ஷன் (1) என்பவரே காணாமல் போயிருந்தார்.

நேற்று முன்தினம் மாலை களுதாவளையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். கடற்கரையில் விளையாடிவிட்டு கடலில் குளித்துள்ளனர்.

அப்போது டிலான்ஷன் அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

உடனடியாக நண்பர்கள், அருகிலுள்ள கடற்படையினரிடம் விடயத்தை தெரிவித்தனர். கடற்படையினர் உடனடியாக தேடுதலில் இறங்கினாலும், கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞனை மீட்க முடியவில்லை.

காணாமல் போன இளைஞனை தேடி நேற்றும் மீனவர்களும், கடற்படையினரும் தேடுதல் நடத்தினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post