தாமரை மொட்டு எமக்கு வெற்றியீட்டக் கூடிய இராசியான சின்னம்- மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திடும் நிகழ்வு அவரது மிரிஹான இல்லத்தில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் பின்னர் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச அவர்கள்,

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகக் கட்டுப்பணம் செலுத்தியிருக்கின்றார். இந்நிலையில் சின்னத்தை மாற்றுவதென்றால் அதற்குச் சட்ட ரீதியான முறைமைகள் இருக்கின்றன. இதனை நீதிமன்றத்தினூடாகவே அணுக முடியும்.

எனவே, நாம் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுவோம். மாபெரும் வெற்றியும் பெறுவோம். ஏற்கனவே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இதே சின்னத்தில் வெற்றி பெற்று காண்பித்துள்ளோம். தாமரை மொட்டு எமக்கு வெற்றியீட்டக் கூடிய இராசியான சின்னமாகும்” – என்றார்.

இந்த நிகழ்வில் பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post