குருவே திருவான இறைவன்; உண்மையான குருவினை அடைவது எவ்வாறு...?!

ஆன்மீக மெய்யன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்! வாழ்க வளமுடனும் நலமுடனும் கடந்த சில காலங்களாக உலக மக்களின் உய்வு வேண்டி கலியின் கோரப் பிடியில் இருந்து மனித குலம் தப்பிப்பதற்கான பல ஆன்மீக உபதேசங்களை அவ்வப்போது தொகுப்பாக்கி மக்களின் பார்வைக்காகவும் படித்து பின்பற்றி ஏனையோருக்கும் அதன் பயன்களை எடுத்தியம்ப வேண்டும் அவர்களையும் சுகமாக வாழ வைக்க வேண்டும் எனும் எம்மையெல்லாம் ஆட் கொண்டு வழி நடாத்தி வரும் ஞான குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் தினந்தோறும் உபதேசிக்கப்படும் ஆன்மீக முத்துக்களை கோர்வையாக்கி தருவதில் மகிழ்வு கொள்கிறோம்.

குரு எனப்படும் வார்த்தை திகட்டாத பேரின்ப சுகத்தை தரும் அள்ள அள்ள குறையாத அற்புதமான கற்பகவிருட்சம் அப்பேற்பட்ட கற்பகவிருட்சத்தினை கண்டுகொள்ளாமல் துன்பத்திலே காலம் கடத்திக் கொண்டிருக்கிறது மானிட சமுதாயம்.

"கற்பனை கடந்த சோதி
   கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
   யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
    திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
   பூங்கழல் போற்றி போற்றி"

இப்பேற்பட்ட மனிதர்களின் எல்லை கட்டிய மாய அறிவிற்கு அப்பாற்பட்டு எல்லை கட்டி நிற்காத பரந்த பிரபஞ்ச இயக்கத்தின் சக்தியினையே இறை என்கிறோம் அப்பேற்பட்ட இறையினை உணரச் செய்து உள்ளொளி பரப்பி உவப்பிலா ஆனந்தத்தினை நல்குபவரே ஞான குரு; அந்த குருவின் பொற்பாதம் பணிந்தேற்றி இந்த உபதேசத்தினை கோர்வையாக்கி சமர்ப்பிக்கிறோம்.

முதலில் மாயை என்றால் என்ன? அதன் தன்மை என்ன? எவ்வாறு மனிதர்களில் பிரதிபலித்து அவர்களின் தெளிந்த அறிவினை மழுங்கடித்து வாழ்வின் முன்னேற்றத்தை தடை செய்கிறது என்பதனை பற்றி உதாரணங்கள் மூலம் தெளிந்து விட்டு அடுத்த பகுதிக்குள் செல்வது வாசகர்களுக்கும் தெளிவினை தரும்.

மாயை என்பது இன்னொருவரால் உருவாக்கப்படும் அல்லது தோற்றுவிக்கப்படும் அல்லது கூறப்படும் கற்பனை விடயமானது சந்தர்ப்பம் சூழ் நிலைகளுக்கேற்ப மனதிலே முதல் இடத்தினை பிடித்து கொள்கிறது இதனையே பீடித்துக் கொள்கிறது எனலாம் இந்த பீடிப்பானது நிலையாக மனதிலே குடி கொண்டு மீண்டும் மீண்டும் அதன்பால் இச்சை கொள்ளச் செய்து மதியினை மயக்கி அதன் தன்மையினை பிரதிபலித்து செல்கிறது இந்த மாயையின் பிரதிபலிப்பினை உண்மையென நம்பி அதன் பிடியில் சிக்குண்டு தவிக்கும் போது எஞ்சிய செல்வத்தினையும் மன நிம்மதியினையும் போலி ஆசாமிகளை நாடிச் சென்று தீர்த்து விட்டு "கடவுளே கண்ணில்லையா?" என கதறி அழுகிறார்கள்.

அந்தோ பரிதாபம் இதனை விளக்க சிறிய கதையொன்றினை விபரிக்கிறோம்; சிறு வயதில் துடுக்குத்தனம் மிக்க சிறுவர்களுக்கு அவர்கள் பாட்டன் பாட்டியினால் பேய்கள் ஆவிகள் சம்பந்தமான பல ஜோடனைக் கதைகள் கூறப்படுவதுண்டு அதனை அடிக்கடி கூறி பயமுறுத்துவதும் உண்டு இனி சிறுவன் வளர்ந்து பெரியனாகி விட்டான் ஒரு சமயம் பக்கத்து ஊருக்கு சென்றவனுக்கு அவசரமாக தனது ஊருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது அப்போதுதான் இரு ஊர்களுக்கும் இடையில் உள்ள மயானம் நினைவுக்கு வருகிறது அதை நினைத்த மாத்திரத்திலேயே சிறு வயதில் பாட்டன் பாட்டி கூறி பயமுறுத்திய பேய் கதைகள் நினைவிற்கு வருகிறது எத்தனை காலமாக செயல் நிலைக்கு வராமல் அவன் மனதிலே ஆளமாக பதிந்திருந்த விடயமானது சந்தர்ப்ப சூழ் நிலைக்கு ஏற்ப மனதிலே வேறெந்த சுய சிந்தனைகளுக்கும் இடம் தராது இடைவிடாமல் அந்த எண்ணமானது வலுவடைந்து கொண்டே வருகிறது மயானத்தை அண்மித்ததும் அவன் தனது சைக்கிளை எழும்பி நின்று மிதிக்கிறான் ஆனால் சைக்கிளானது மிதமான வேகத்தில்தான் நகருகிறது ஏனெனில் அவனது மனதில் ஏற்பட்ட பயத்தினால் உடலானது சோர்வு நிலைக்கு சென்று விட்டது அதனால் எப்படித்தான் முயற்சித்தாலும் அவனால் வேகமாக கடக்க முடியவில்லை அந்த நேரத்தில் திடீரென சைக்கிளின் சக்கரம் பஞ்சராகி விட்டது அங்கே அவனது இதயத் துடிப்பானது பன்மடங்காக பெருகிறது எதிரே தெரியும் சிறு சிறு புதர்களெல்லாம் தன்னை நோக்கி நகரும் பெரும் இருள் சூழ்ந்த உருவங்களாக காட்சி தருகிறது அந்த தருணம் அவன் நிலையென்ன?

இங்கே அவனது சுய புத்தியினை செயற்படுத்த விடாது தடுத்த மாயை என்ன? அவனது சிறு வயதில் கேள்வியுற்று பதித்து வைத்த பயம் எனும் மாயை சந்தர்ப்பம் பார்த்து மதியினை மயக்கி அதன் செயற்பாட்டினை முடுக்கி விட்டுள்ளது; இதயத்துடிப்பு அளவுக்கதிகமாகினால் மாரடைப்பு ஏற்படும் அல்லது இத நாளங்களில் வெடிப்பு ஏற்படும் அங்கே எஞ்சுவது மரணம் மாத்திரமே.

அடுத்த நாள் காலையில் ஊரெல்லாம் செய்தி தீயாய் பரவும் பேய் அடித்து இளைஞன் மரணித்து விட்டான் என; உண்மையில் அவனை பேய்தான் அடித்துக் கொன்றதா? உண்மையினை அலசி ஆராய்ந்தால் அவனைப் பீடித்த மாயையின் செயல் நிலையே இதுவென உணர முடிகிறதல்லவா!

இந்த சிறிய கதை மூலம் நாம் புரிந்து கொள்வது யாது? கயிற்றை பாம்பென நம்பி பயந்து போய் இருக்கும் வேளையில் மின் ஒளிக் கீற்றை அந்த கயிறின் மீது படர விட்டு இது பாம்பல்ல கயிறுதான் என்று ஒருவர் உறுதிப்படுத்திய பின் மனத் தெளிவோடு நாம் பயணிப்போமல்லவா! ஆம் அப்படியான ஆன்மீக ஒளிக் கீற்றினை எம் மனதினுள் பாய்ச்சி உள்ளத்து மாய இருளினை அகற்றி அருட் பெருஞ் சோதியாய் அக ஒளி பரப்பிடச் செய்பவரே ஆன்மீகக் குரு அப்பேற்பட்ட குருவினை அறிந்திடவோ அடைந்திடவோ முடியாமல் தவிக்கும் பலருண்டு ஒரு சாரார் இதனால் நமக்கென்ன கிடைத்து விடப் போகிறது எனக்கெதற்கு குரு வேண்டும் நான் நன்றாகத்தானே வாழ்கிறேன் எனும் ஆணவத்தோடு கடந்து செல்கிறார்கள் ஈற்றில் பெற்ற செல்வத்தை வைத்து காத்திட வழியின்றி தவிக்கிறார்கள் பெரும் செல்வத்தினை தேடி வங்கியில் வைப்பிலிடுகிறார்கள் அந்த வைப்பு நிரந்தரமாக நிலைப்பதற்கு அல்லது பாதுகாப்பதற்கு ஆன்ம பலம் தேவைப்படுகிறது அந்த ஆன்ம பலத்தை வைத்து புத்தியின் மூலம் பகுத்தறிந்து செயலாற்ற முடிகிறது இவ்வாறு செய்யும் செயலானது வாழ்வினைப் பாதிக்காது இருந்திடவே ஆன்மீகக் குரு அவசியமாகிறார்.

இவ்வாறு கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்பவர்களது வாழ்வானது சில காலங்களில் கசப்புணர்வை நல்குகிறது ஏனெலில் பயம், துக்கம், சோர்வு,அலுப்பு,வெறுப்பு,கசப்புணர்வு என எத்தனையெத்தனை தீய விடயங்கள் உள்ளனவோ அத்தனையும் ஏற்படும் விதங்கள் வித்தியாசமானவையாக பார்வைக்கு தெரிந்தாலும் அனுபவிப்பு என்பது ஒரே விடயத்தில்தான் நிறைவடைகிறது.

இவ்வாறு எந்த ஒரு செயலும் ஒரே தன்மையைத்தான் கொண்டிருக்கும் ஆனால் அவை பெறப்படுவதோ அல்லது வழங்கப்படுவதோ பல வழிகளில் திரிபுபட்டு காணப்படுவதனையே மாயை என்கிறார்கள் ஞானிகள்.

இந்த மாயைகளை வெல்வதற்காகத்தான் பண்டைய காலங்களில் அரசாட்சி புரிந்த அரசர்கள் தங்கள் அரச சபைகளிலே ராஜ குருவாக ஆன்மீகத்தில் உயர் நிலையடைந்த குருவினை சரணடைந்து அவர்களை தம்முடனே வீற்றிருக்க செய்திருந்தார்கள் தனக்கோ தனது நாட்டிற்கோ தீங்கு வரும்போது அதனை வெல்வதற்கு என்னென்ன செய்யவேண்டும் எப்படி  செய்தால் அதனை வெற்றி கொள்ளலாம் என்று ராஜ குருவின் அறிவுரைகளை உள்வாங்கி அதன்படி செயற்பட்டு வெற்றியடைந்ததை நாம் புராணங்கள் இதிகாசங்கள் மூலமாக படித்திருக்கிறோம்.

ஆக உலக பந்தங்கள் எனும் மாயையில் இருந்து விடுபட்டவர்களே யோகிகள், ஞானிகள், ரிஷிகள்,சித்தர்கள் இப்பேற்பட்டவர்களை அணுகி அவர்களது அன்புக்கு பாத்திரமாகி அவர்கள் நெறி நின்று வாழும் போது மலர்களை தாங்கிப் பிடித்திருக்கும் காம்பு போல எம்மையும் எந்த சுய நலமும் பாராது எம்மை மாத்திரமல்ல இந்த பிரபஞ்சத்தினையே தாங்கிப் பிடித்து ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் பேரழிவுகளில் இருந்து தன் பக்தர்களையும் அவர்கள் வாழும் சூழலில் இருக்கும் அனைத்தையும் காத்தருள்கிறார்கள் என்பதே பேருண்மை.

பத்து மாதம் சுமந்து தாய் குழந்தையினை ஈன்றெடுக்கிறாள் ஆனால் குழந்தை தாய்மையினை அவரின் அரவணைப்பின் மூலமே உணர்ந்து கொள்ளுகிறது அந்த உணர்வு தன்மையே குழந்தை வளர்ந்ததும் அந்த தாய்மை நிலையின் மகத்துவத்தினை உணர்ந்து அதற்கு கட்டுப்பட்டு வாழ்கிறது எனலாம். 

ஆனால் தகப்பனை யார்? என தாய் காண்பிக்காதவிடத்து அக் குழந்தை தனது உருவாக்க சக்தியான தந்தையினை அறியாது வாழ்கிறது; அதுவே தாய் இவர்தான் உன் தந்தை என குழந்தைக்கு காண்பித்து காண்பித்து வளர்க்கும் போது குழந்தையானது தாய் எனும் உணர்வு சொல்வதனை அப்படியே நம்பி விடுகிறது அதையே தன் இறுதிவரை நம்புகிறது. தாயானவர் எவரை தகப்பனாக காண்பிக்கிறாரோ அவரே அக்குழந்தையின் மனதில் தகப்பனாக வீற்றிருப்பார்.

இந்த தாய் எனும் சக்திதான் இப் பிரபஞ்சத்தினை இயக்கும் ஆதி சக்தி லோக மாதா காயத்திரி தேவி அந்த லோக மாதா காயத்திரி தேவியினை தன் மூல குரு அகஸ்திய மா மகரிஷியின் வழிகாட்டுதலில் கண்ணையா யோகி மகரிஷியினை தன் குருவாக ஏற்று உபாசித்து தான் யார்? தன் அவதார நோக்கம் என்ன? என்பதனை தெளிந்து அதனை மக்களுக்கு போதித்து அருள் வழிகாண்பிக்க அவதரித்தவரே மகா புருசர் ஞானத் தந்தை பகவான் முருகேசு சுவாமிகள்.

அப்பேற்பட்ட ஞானத் தந்தையின் அடிச் சுவட்டினை பின்பற்றி உலகில் அடிமட்ட மனிதர்கள் அனுபவித்த அத்தனை துன்பங்கள் வேதனைகளை அனுபவித்து இனி இவ்வுலகில் வாழவே முடியாதா? இறைவா!! எனும் கேள்விகளோடு காத்திருந்த எம்மையெல்லாம் ஆட் கொண்டு வழி நடாத்திவரும் பகவான் முருகேசு சுவாமிகளின் அன்புக் குழந்தை ஆன்மீக குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளுக்கு அருள்வழி காட்டவும் அவர் மூலம் மூவுலகங்களிலும் அமைதியினை நிலை நாட்டவும் அவரை ஆட்கொள்ளவுமே இப்பேற்பட்ட சோதனைகளை மேற் கொண்டார் என்பதனை இப்போது அவர் அறிந்து தெளிந்து மக்களுக்கு ஞான வழிகாட்டி வருகிறார்.

ஆதி சங்கர பகவத் பாதருக்கு எப்படி பத்ம பாதரோ
ஸ்ரீ ராம கிருஸ்ண பரமஹம்ஸருக்கு  எப்படி நரேந்திரர் விவேகானந்தரானாரோ அத்தனை அம்சங்களோடும் அருட் பெரும் ஜோதியாய் அகிலமெங்கும் ஆன்மீக ஒளி பரப்பி அமைதியினையும் ஆனந்த பெரு வாழ்வினையும் அளிக்க தன்னை அணு அணுவாக தன் குரு பகவானின் அருள் கொடையெனும் உளி கொண்டு செதுக்கி செதுக்கி அனைவரும் கையெடுத்து வணங்கி போற்றி துதி பாடி நிற்கும் ஒரு கலியுகத்தினை கல்கியில் கலக்க செய்திடும் அரு மருந்தாக தன்னையும் தன் சக்திகளையும் வெளி உலகிற்கு விளம்பரம் செய்திடாமல் வாழ்வு இனித்திட விளக்கம் தேடி வருபவர்களுக்கு கலங்கரை விளக்கமாக காலத்தின் தேவையாக மட்டக்களப்பு புண்ணிய பூமியிலே சுமார் பதினைந்து பதினாறு வருடங்களாக பல ஆன்மீக கூடங்கள் வழிபாட்டு தலங்கள் அமைத்து அருளுபதேசம் செய்து ஆன்ம நெறி நல்கி வருகிறார் என்றால் மிகையாகாது.

"குரு தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராதாம்" அவ்வாறு கடவுளை காட்டுபவரே குரு அந்த இறையின்பத்தினை தொட்டு அனுபவிக்க வைப்பவரே குரு வாழ்வில் துன்பம் என ஓடோடி வருபவர்களிடம் பணம் பறிக்காது அவர்களை இன்னுமின்னும் கடவுள் எனும் பெயரில் கொள்ளையடிக்காது கட்டுக்கட்டாக வங்கியில் சேமித்து வைக்காது எந்த நேரமும் திறந்த கதவுகளோடு வீற்றிருந்து துன்பம் என வருபவர்களின் துயர் தீர்க்கும் கற்பக்கிரகமே குரு அவரே நடமாடும் தெய்வம்.

நடமாடும் தெய்வத்தினை கண்டு கொள்ள தவறிவிட்டு படத்தில் நாம் எப்படி கடவுளை காணப் போகிறோம்? "இந்த உண்மையினை உணர்ந்த குரு பக்தியில் பய பக்தியில் எழுந்த வரிகள் குருவினை நாம் தேடத் தேவையில்லை உண்மை பக்தி வைத்தால் சக்தி பெருகி இவ்வாறான உபதேச உண்மைத் தொகுப்புகள் அவர்களை இனங்காட்டி விடும்.

இந்த கண்டு கொள்ளாமை பற்றி வள்ளல் பெருமான் பெரும் வேதனைப்பட்டு கூறுகிறார் "கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன்" என்கிறார் அதனையே இன்னும் இக்கால மக்களுக்கு புரியும் விதத்தில் "கொண்டு வந்தேன் சந்தையிலிட்டேன் வாங்குவார் இல்லை மலிவு மலிவு என்று கூவினேன் இனியென்ன நானும் வள்ளலாரைப் போல சந்தையில் மலிவென இலவசமாக வழங்க வந்த ஞானப் பொக்கிசத்தினை கட்டிக் கொண்டு சென்று வருகிறேன்" என இந்த உலக மக்களை பீடித்துள்ள மாயையினை எண்ணி எண்ணி கவலைப்படுகிறார்.

பட்டினத்தார் இவ்வாறுதான் ஒரு முறை ஒரு கிராமத்தில் மரணச் சடங்கு நிகழும் வீட்டிற்கு சென்றார் அங்கே அனைவரும் மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுதுகொண்டு இருந்தார்கள் திடீரென பட்டினத்தடிகளாரும் தலையில் அடித்துக் கொண்டு பெரும் சத்தத்தோடு ஒப்பாரி வைத்து அழ தொடங்கினார் இவ்வாறு பெரும் துறவி ஒரு மகான் அழுவதனை பார்த்த மக்கள் அவரைப்பார்த்து முற்றும் துறந்த ஞானியான தாங்கள் இந்த மரணச் சடங்கில் ஏன் அழுகிறீர்கள் நீங்கள் பற்றற்றவர் ஆகிற்றே என்றார்கள்; ஆமாம் நான் பற்றற்றவன்தான் நான் அழுதது இறந்து போன இந்த மனிதருக்காக அல்ல இன்றைக்கு இறந்த இவரைப் பார்த்து நாளைக்கு இறக்கப்போகும் அல்லது அடுத்தடுத்த நாட்களில் இறக்கப் போகும் உங்களை நினைத்துத்தான் அழுகிறேன் என்றாராம்.

இப்படித்தான் உலகிற்கு வழிகாட்ட வந்த ஞானியர் வாழ்க்கை அதையே மிக அழகாக ஈஸ்வரப்பட்ட மகரிஷி பாடலாக படித்துள்ளார் " கரைந்துண்ணும் காகம் போல ஞானியர் வாழ்க்கை..."
"புத்தன் ஞானம் எதில் பெற்றான் புசிக்க உணவு இல்லாமலா....?" இப்படி பல பாடல்களை உலகின் தெளிவிற்காகவும் விடிவிற்காகவும் பாடி வைத்து சென்றுள்ளார்கள் மகான்கள்.

இதுவே தாடி வளர்த்துக் கொண்டு கமண்டலம் ருத்திராட்சை கிலோகணக்கில் போட்டுக் கொண்டு கையால் திருநீறு எடுக்கிறாராம் நெருப்பின் மேல் படுக்கிறாராம் நீரின் மேல் நடக்கிறாராம் எனும் கண்கட்டி வித்தையினை நம்பி அதன்பால் ஈர்க்கப்பட்டு அதனால் நமக்கெந்த நன்மையோ வாழ்வில் மனநிலையில் மாறுதலோ வரவில்லை அல்லது வரப்போவதில்லை என்பதனை உணர்ந்தவர்களுக்கு தேடல் அதிகரிக்கிறது அந்த தேடலே தன்னுள் ஆன்மாவாக வீற்றிருக்கும் அதே ஆன்ம சொரூபமானவர் ஆன்மாவை கண்டுணர்ந்தவர் குருவாக அருள் வழிகாட்டிட அவதரித்து மக்களோடு மக்களாக கலந்திருப்பார் அப்பேற்பட்டவரை இனங்காண்பது உண்மையான தேடலும் ஆன்ம தாகமும் எவருக்கு ஏற்படுகிறதோ அவருக்கே உண்மைக் குருவின் தரிசனமும் ஞான வழிகாட்டலும் ஈற்றில் பிறவாப் பேரின்ப நிலையான முக்திப் பேறும் கிட்டிடும் என்பதில் 100% நம்பிக்கை வைத்திடுங்கள்.

ஞானிகள் தன் உடலைத்தான் சமாதியில் விட்டுச் செல்கிறார்கள் ஆனால் அவர்கள் அவ்வப்போது ஒவ்வொரு உடல் தரித்து மக்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அவர்கள் சக்திக்குத் தக பக்திக்குத் தக அருள்வழி காண்பிப்பார்கள் தற்போதும் அவ்வாறே உலகின் ஒரு கோடியிலே இலங்கைத் தீவிலே மட்டக்களப்பு புண்ணிய பூமியிலே பெரிய உப்போடையில் ஸ்ரீ பேரின்ப ஞான பீடம் அமைத்து கோடியில் இலட்சத்தில் ஒருவராக மகா ஞானியாக மக்களோடு மக்களாக வீற்றிருந்து அருள்வழி காண்பித்து உலக சேமத்துக்காக பௌர்ணமி தினங்களில் குரு வாரமான வியாழக்கிழமைகளில் ஏனைய குரு பூசை சிவராத்திரி நவராத்திரி என அனைத்து சமய அனுஸ்டானங்களையும் தவறாது கடைப்பிடித்து அதே வேளை பௌத்த மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் மற்றும் இஸ்லாம் மார்க்கத்தினை பின்பற்றுபவர்கள் மற்றும் கிறிஸ்தவ மார்கத்தினை பின்பற்றுபவர்கள் என எந்த மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்கள் சற்குருவினை நாடி வந்தாலும் அவர்கள் மார்க்கத்தில் எப்படியெப்படியெல்லாம் நல் வாழ்வுக்காக வழிகாட்டி போதித்துள்ளார்களோ அந்த தன்மையோடு எதைக் கண்டால் பற்றிப்பிடிப்பார்களோ அதற்கேற்றால் போல் அவர்களுக்கு உபதேசித்து மதம் இனம் மொழி கடந்த ஆன்மீகத்தினை ஊட்டி அருளும் தாயானவரும் தத்தையானவருமான சற்குரு நாதர் ஞான வள்ளல் ஆன்மீகக் குருவின் சன்நிதானத்திற்கு விரைந்திட்டால் வாழ்வின் வெற்றியாளர்களாக மிளிரலாம் என்பது திண்ணம்.

"வாழ்க வளமுடனும் நலமுடனும்"

0/Post a Comment/Comments

Previous Post Next Post