கொழும்பில் துப்பாக்கிச் சூடு சம்பவம்:ஒருவர் பலி!!!

கொழும்பு ஜம்பட்டா வீதியில் நேற்றையதினம் இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜம்பட்டா வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இனம் தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும், சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post