மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


“விவசாயக் கடன்கள் தள்ளுபடி – இலவச உரம்..” – கோட்டாபய அனுராதபுரத்தில் அறிவிப்பு !

“அன்று நாட்டை மீட்ட ஒருவனான என்னை இன்று மிலிட்டரிக்காரன் என்கின்றனர். அன்று போர் நடந்த போது இரவில் நித்திரை கொள்ளாத மக்கள் அவற்றை மறந்துவிடமாட்டார்கள். அப்போது மிலிட்டரிக்காரன் நல்லவர் இப்போது கூடாதா? மூவின மக்களுக்கு தமது வழிபாட்டு தலங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தான் இந்த அரசு செய்த வேலை.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க இலவச உரம் அத்துடன் அனைத்து விவசாயக் கடன்களும் இரத்துச் செய்யப்படும். நாட்டை தன்னிறைவடைய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.350 ரூபாவுக்கு உரத்தை வழங்காமல் அவற்றை இலவசமாக வழங்குவோம்.

கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி இராணுவத்தினர் நவம்பர் 17 ஆம் திகதி விடுதலை செய்யப்படுவர். பொருளாதார இலக்குகள் எங்களிடம் உள்ளன.”

– ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அனுராதபுர தேர்தல் பிரசார கூட்டத்தில் அறிவிப்பு –
No comments

Powered by Blogger.