அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் சாதனை!!!

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணர் Dr,ரவிந்திரன் தலமையில் இலங்கையில் அதிகூடிய நிறையுடைய கட்டியை வெட்டி அகற்றி சுகமாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.


இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


அக்கரைப்பற்று எழுவெட்டுவான் ஆதார வைத்தியசாலையில்
பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 Kg நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டு அந்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள்.


நேற்று முன்தினம் (05) முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாகவும், இது சுமார் 2 மணித்தியாலம் இடம்பெற்றதன் பின்னர் அந்தக்கட்டியை அகற்றினார்கள். 19.5 Kg நிறையையும் சுமார் 48CM நீளத்தையும் 34CM அகலத்தையும் 23CM உயரத்தையுமுடைய பெரும் கட்டி ஒன்றை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களினால் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.


இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்ட சத்திர சிகிச்சை நிபுணர்களான பீ.கே.இரவீன்திரன், மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் யுரேக்கா விக்ரமசிங்க, மயக்க மருந்து வைத்திய நிபுணர் றுவான் குருப்பு, மயக்க மருந்து மற்றும் சத்திரசிகிச்சை சிரேஷ்ட வைத்தியர்கள், சத்திர சிகிச்சை கூட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியளர்கள் உள்ளிட்ட குழுவினரால் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post