ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு!!!


ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாகாணசபையின் 5 வருட பதவிகாலத்தில் 5 ஆளுநர்கள் மற்றும் 3 முதலமைச்சர்களின் கீழ் குறித்த ஊவா மாகாணசபை செயற்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய மாகாண சபைகளின் பதிவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்து அவை கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஊவா மாகாண சபை மாத்திரம் செயற்பட்டது.

இந்தநிலையில் இன்று நள்ளிரவுடன் ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் நாட்டின் சகல மாகாண சபைகளின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

ஏற்கனவே ஏனைய மாகாணசபைகள் ஆளுநரின் அதிகாரத்திற்கு கீழ் உள்ள நிலையில் ஊவா மாகாணசபையும் ஆளுனரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post