ஸ்பெய்னில் நீர்மூழ்கியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 100 மில்லியன் யூரோ!!

ஸ்பெய்னில் நீர்­மூழ்கி கப்பல் ஒன்­றி­லி­ருந்து கைப்­பற்­றப்பட் கொகேய்ன் போதைப்­பொ­ருளின் பெறு­மதி சுமார் 110 மில்­லியன் யூரோ (சுமார் 1990 கோடி இலங்கை ரூபா) அந்­நாட்டு அதி­கா­ரிகள் கடந்த புதன் கிழமை தெரி­வித்­துள்­ளனர்.


போர்த்­து­க­லுக்கு அரு­கி­லுள்ள, ஸ்பெய்னின் கெலி­சியா பிராந்­திய கடற்­ப­கு­தியில் கடந்த சனிக்­கி­ழமை நீர்­மூழ்கிக் கப்­ப­லி­லி­ருந்து பெருந்­தொகைப் கொகேய்ன் போதைப்­பொருள் கைப்­பற்­றப்­பட்­டது.


இந்­நி­லையில், அரு­கி­லுள்ள துறை­மு­க­மொன்­றுக்கு மேற்­படி நீர்­மூழ்கிக் கப்பல் இழுத்துச் செல்­லப்­பட்டு 3 நாட்­களின் பின்­னரே இந்­நீர்­மூழ்­கி­யி­லி­ருந்த போதை­ப்­பொ­ருட்­களின் அளவு முழு­மை­யாக மதிப்­பி­டப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள் கடந்த புதன்­கி­ழமை தெரி­வித்­தனர்.


மொத்­த­மாக 152 பொதி­களில் போதைப்­பொ­ருட்கள் காணப்­பட்­ட­தாக ஸ்பானிய பொலிஸார் தெரி­வித்­தனர்.
65 அடி (20 மீற்றர்) நீள­மான இந்த நீர்­மூழ்கி இழுவை வாக­ன­மொன்றில் ஏற்றிச் செல்­லப்­படும் புகைப்­ப­டங்­களும் வெளி­யா­கி­யுள்­ளன.ஐரோப்­பாவில்; நீர்­மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post