இன்றைய நாளின் ராசி பலன்கள்(19.11.2019)

மேஷம்: எதிர்ப்புக்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். நட்பு வட்டம் அதி கரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால், சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும் வெற்றி பெறும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.

கடகம்: சந்திரன் ராசிக்குள் இருப்பதால் சிறிய முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைப் பல முறை அலைந்து முடிப்பீர்கள். உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டுச் செயல் படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

சிம்மம்: கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரம் சுமாராக இருக்கும் . உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: குடும்பத்தில் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காகச் சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். நீண்ட நாளாகப் பிரச்சினையாக இருந்த விஷயங்களைத் தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

துலாம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வேற்று மதத்தவர்கள் அறிமுகமாவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புதிய முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியா பாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும்.

தனுசு: சந்திராஷ்டமம்  நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்க முயற்சி செய்யுங்கள்.  முன் கோபத்தையும்,   வீண் பதட்டத்தையும் குறைப்பது நல்லது. உங்களின் பலம், பலவீனம் அறிந்துசெயல்படுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வீட்டின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிலும் வெற்றி பெறும் நாள்.

கும்பம்: சாதுரியமாகப் பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை, மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாளாகச் சந்திக்க வேண்டியவர்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். அமோகமான நாள்.

மீனம்: மற்றவர்களை நம்பி எந்தவேலைகளையும், ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவு வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.







No comments

Powered by Blogger.