பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வு தவிர்ந்த ஏனைய நிகழ்வுகள் 1 மணி நேரத்திற்குள் வரையறை;கல்வி அமைச்சர்!!

பாடசாலைகளில் விளையாட்டு வைபவம் தவிர வேறு எந்த வைபவங்களும் 1 மணித்தியாலத்திற்குள் வரையறுக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்

இதற்காக புதிய கல்வி கொள்கைக்கு அமைவான சுற்றறிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தான் கல்வி கற்ற ரதம்பல ஸ்ரீசுமங்கல வித்தியாலயத்திற்கு நேற்று விஜயம் செய்தார்.

தற்பொழுது பாடசாலைகளின் வகுப்பறைகள் 19 ஆம் நூற்றாண்டுக்கு ஒத்ததாக அமைந்துள்ளன. 20 ஆம் நூற்றாண்டுக்கான ஆசிரியர்கள் 21 ஆம் நூற்றாண்டுக்கான மாணவர்களுக்கு கல்வியை கற்பிப்பதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

அரசாங்க பாடசாலைகளில் 60,000 ஆசிரியர்கள் இருக்கின்றனர். இவர்களுள் 15,000 ஆசிரியர்கள் பயிற்சி பெறாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கு அமைவாக அதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.