20 இராஜாங்க அமைச்சர்கள் நாளை மறுதினம் பதவியேற்பு!!

புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனம் மற்றும் அவர்களின் பதவியேற்பு நிகழ்வு நாளை மறுதினம் (27) நடைபெறவுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு திங்கட்கிழமை (25) நடைபெறலாம் என ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

20 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், இவர்கள் பிரதி அமைச்சருக்கு மேலான அதிகாரங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

எனினும், இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்றும் நாளை மறுநாளே இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் அமைச்சரவை அந்தஸ்துடைய 16 அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்திருந்தார்.

இதன்போது, அவர் அமைச்சர்களைத் தெரிவு செய்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post