இந்திய அரசியல் அமைப்பு நாள் - 2019 நிகழ்வு யாழில்.

யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய அரசியல் அமைப்பு நாள் - 2019 ஐ முன்னிட்டு அரசியல் அமைப்பு மற்றும் அதனை உருவாக்கிய குழுவினர் பற்றிய ஒரு புகைப்படக் கண்காட்சி இன்று (26) யாழ் இந்தியத் துணைத்தூதுவர் உயர்திரு ச. பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் யாழ் பொது நூலகத்தின் இந்தியா கோணர் பகுதியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண அவைத் தலைவர் கௌரவ சீ.வீ.கே சிவஞானம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

இந் நிகழ்வில் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, யாழ் பொது நூலக பிரதம நூலகர், யாழ் இந்தியத் துணைத்தூதுவராலய உத்தியோகத்தர்கள், பொது நூலக உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post