மட்டக்களப்பு மாவட்டமட்ட திறன் விருத்திச்செயலமர்வு; 28/11/2019 அன்று இடம்பெற்றது!!

தேசிய மனிதவள அபிவிருத்திச் சபை பொதுச்சேவை உத்தியோகத்தர்களுக்கான 'பொதுமக்களுக்கான வினைத்திறனான சேவையை விரைவுபடுத்துவதற்கான முறைமைகள்' பற்றிய செயலமர்வொன்றினை 28.11.2019 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில், மட்டக்களப்பு மாவட்டச் செயலக ஒருங்கிணைப்பில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிகச் செயலாளர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்தா வரவேற்புரையுடன் ஆரம்பித்து வைத்தார். இச் செயலமர்வுக்கு வளவாளராக அனுபவம்வாய்ந்த பேராசிரியர் காமினி டி அல்விஸ் அவர்கள் கலந்துகொண்டார். இதில் தேசிய மனிதவள அபிவிருத்திச் சபையில் இருந்து வருகைதந்த உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் அவர்கள் அதன் பொதுநோக்கம், அதன் மூலம் எதிர்பார்கும் அடைவுமட்டம் என்பன பற்றி ஆரம்ப உரையாற்றி இந்நிகழ்வினை தொடங்கி வைத்தார். இதில் அதே அலுவலகத்தை சேர்ந்த உதவிப்பணிப்பாளர் திருமதி ஜெயசிங்க அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வில் மாவட்டத்தின் திட்டமிடல் பணிப்பாளர், அனைத்து பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச  செயலாளர்கள், திட்டமிடல் மேலதிக மற்றும் உதவிப்பணிப்பாளர்கள் அடங்கலாக பல உயர்நிலை அதிகாரிகள் இச்செயலமர்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாவட்டத்தின் புள்ளிவிபரங்களின்படி வறுமை, திறனற்ற மனிதவள வெளியேற்றம், நுண்கடன்தொல்லை, அதிகளவான கணவனை இழந்த தாய்மார்கள், பாடசாலை இடைவிலகல், அடிக்கடி பாதிப்பேற்படுத்தும் அனர்த்தங்கள் மற்றும் இன்னோரன்ன காரணங்களால் பாதிக்கப்பட்டு மிக நலிவுற்றிருக்கும் இக்குடித்தொகையை நலிவுறு நிலையில் இருந்து மீட்டெடுக்க தரமான, பாகுபாடற்ற, வினைத்திறனான, விரைவான அரசசேவைதான் மிக அவசியம். அதன் மூலம் இவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தி இச்சமுகத்தினை மெதுமெதுவாக நலிவுறும் நிலையில் இருந்து மீட்டெடுக்க முடியும் எனவும் சி.தணிகசீலன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.0/Post a Comment/Comments

Previous Post Next Post