இன்றைய நாளின் ராசி பலன்கள்(29.11.2019)


மேஷம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும் . தெளிவான முடிவு எடுப்பீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

மிதுனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். எதிர்பாலினத்தவரால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமை வெளிப்படும் நாள்.

கடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். அதிகார பதவியில் இருப் பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்: புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

கன்னி: எதிர் பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும்இ எதிர் பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்: தன்னிச்சையாக சிலமுக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள் வெற்றிக்கு வித்திடும் நாள்.

விருச்சிகம்: கடந்த இரண்டு மூன்று நாட்களாகக் கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பண வரவு  திருப்திதரும். உறவினர்களின் ஆதரவு  கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப்  பெறுவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால், மனதுக்குள் , இனம் புரியாத பயம் வந்து போகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த வேறுபாடுகள் நீங்கும். உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை ஏற்படும். உத்தியோகத்தில், எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விளைந்து  கொடுக்க வேண்டிய நாள்.

மகரம்: வேலைகளை உடனேமுடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும், பகைத்துக்கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுகப்பிரச் சினைகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கும்பம்: எடுத்த காரியத்தில் வெற்றிபெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

மீனம்: எதையும் சமாளிக்கும், சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்திவரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்கள் மீது நல்ல அபிப்ராயம் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.



No comments

Powered by Blogger.