தேர்தல் நாளான இன்று வினியோகிப்பதற்காக 3850 சுவரொட்களை வைத்திருந்த தேசிய சுதந்திர முண்ணணியின் அமைப்பாளர் கைது!!

தேர்தலுக்கு முந்தைய நாளான நேற்று (15) 'அமைதிக்காலம்' பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் குறிப்பிட்ட ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் வகையில் பெருந்தொகை போஸ்டர்களுடன் தேசிய சுதந்திர முன்னணியின் சிலாபம் தொகுதி அமைப்பாளர் நேற்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையிலேயே நேற்று இந்நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து இரண்டு வகையான 3,850 போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டன.

No comments

Powered by Blogger.