நோர்வூட் நகரில் தீ விபத்து; 4 கடைகள் தீக்கிரை! நடந்தது என்ன?

நோர்வூட் நகரில் இன்று (25) காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தால்4 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்துள்ளன.

நோர்வூட் நகரிலுள்ள எரிவாயு விற்பனை நிலையத்திலிருந்தே காலை 07 மணியளவில் இத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் ஏனைய கடைகளுக்கும் தீ பரவியது.

இதனையடுத்து ஹட்டன், டிக்கோயா நகரசபையின் தியணைப்பு பிரிவினரும், பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இத்தீவிபத்தால் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை. பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

No comments

Powered by Blogger.