அமரர் வீ. கே. வெள்ளையனின் 48 ஆவது ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அமரர் வீ. கே. வெள்ளையனின் 48 ஆவது ஆண்டு சிரார்த்த தின நிகழ்வும், நினைவுப் பேருரையும் டிசம்பர் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஹட்டன் டி.கே.டபுள்யூ. கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணி தலைவர் வீ.இராதாகிருஸ்ணன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன், பாராளுமன்ற உறுபினர்களான வேலுகுமார், எம். திலகராஜ், ஏ. அரவிந்த்குமார், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், எம். உதயகுமார், எம். ராம், சரஸ்வதி சிவகுரு, ஆர். ராஜாராம் உட்பட மேலும் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.