லொறிக்கு குறுக்கே பாய்ந்த பன்றிக் கூட்டத்தினால் 60 அடி பள்ளத்தினுள் பாய்ந்த லொறி!!

பலாங்கொடையிலிருந்து ஹட்டனுக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று இன்று அதிகாலை (24( விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொகவந்தலாவ – ஹட்டன் பிரதான வீதியில் பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் வைத்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பன்றிகள் கூட்டமாக – பிரதான வீதியில் குறுக்கே வந்ததால், சாரதி வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார். எனினும், வேகக்கட்டுப்பாட்டை இழந்து சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்துக்கள்ளானது.

குறித்த லொறியின் இருந்த மரக்கறி வகைகள் சேதமடைந்துள்ளன.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.