69 இலட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றியீட்டினார் கோட்டாபய!

இலங்கையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கிய கோத்தபாய ராஜபக்ச 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்று ( 52.25 வீதம்) பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5 இலட்சத்து 56 ஆயிரத்து 4239 வாக்குகள் ( 41.99 வீதம்) பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் களமிறங்கிய அநுரகுமார திஸநாயக்க 4 இலட்சத்து 18 ஆயிரத்து 553 வாக்குள்( 3.16 வீதம் ) பெற்றுள்ளார்.

இதேளை நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிய ஜனநாயக முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அதிகளவான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாஸ 3 லட்சத்து 12 ஆயிரத்து 722 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச 23 ஆயிரத்து 261 வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார்.

எம்.கே. சிவாஜிலிங்கம் 6 ஆயிரத்து 845 வாக்குகளையும், ஆரியவன்ச திஸாநாயக்க 6 ஆயிரத்து 790 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதேவேளை, வன்னி தேர்தல் தொகுதியில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 739 வாக்குகளை பெற்று சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச 26 ஆயிரத்து 105 வாக்குகளை மாத்திரம் பெற்றிருந்தார்.

ஆரியவன்ச திஸாநாயக்க 2 ஆயிரத்து 546 வாக்குகளையும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆயிரத்து 295 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 841 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச 54 ஆயிரத்து 135 வாக்குகளை பெற்றதுடன் அனுர குமார திஸாநாயக்க 3 ஆயிரத்து 730 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ 2 லட்சத்து 38 ஆயிரத்து 649 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச 38 ஆயிரத்து 460 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா 13 ஆயிரத்து 228 வாக்குகளையும், ஆரியவன்ச திஸாநாயக்க 2 ஆயிரத்து 363 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் திகாமடுல்லயில் சஜித் பிரேமதாஸ 2 லட்சத்து 59 ஆயிரத்து 673 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 58 வாக்குகளையும் அநுர குமார திஸாநாயக்க 7 ஆயிரத்து 460 வாக்குகளையும், எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா 2 ஆயிரத்து 214 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை, நுவரெலியாவிலும் சஜித் பிரேமதாஸ அதிகளவாக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கமைய 2 லட்சத்து 77 ஆயிரத்து 913 வாக்குகளை பெற்று சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 823 வாக்குகளையும், அநுரகுமார திஸாநாயக்க 5 ஆயிரத்து 891 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் தவிர்ந்த தென்பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வகையில் தென்மாகாணமான காலி மாவட்டத்தில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 148 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ 2 லட்சத்து 17 ஆயிரத்து 401 வாக்குகளையும், அனுரகுமார திஸாநாயக்க 27 ஆயிரத்து 6 வாக்குகளையும், மகேஸ் சேனாநயக்க 2 ஆயிரத்து 542 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 804 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 6 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 26 ஆயிரத்து 295 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச 3 லட்சத்து 74 ஆயிரத்து 481 வாக்குகளை பெற்று பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 26 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 23 ஆயிரத்து 439 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலும் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.

அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் 7 லட்சத்து 27 ஆயிரத்து 713 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ 5 லட்சத்து 59 ஆயிரத்து 921 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 53 ஆயிரத்து 803 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

களுத்துறையில் கோட்டாபய ராஜபக்ச 4 லட்சத்து 82 ஆயிரத்து 920 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ 2 லட்சத்து 84 ஆயிரத்து 213 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 27 ஆயிரத்து 681 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச 8 லட்சத்து 55 ஆயிரத்து 870 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ 4 லட்சத்து 94 ஆயிரத்து 671 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 61 ஆயிரத்து 760 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

வடமேல் மாகாணத்திலும் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கமைய குருநாகல் மாவட்டத்தில் 6 லட்சத்து 52 ஆயிரத்து 278 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ 4 லட்சத்து 16 ஆயிரத்து 961 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 36 ஆயிரத்து 178 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 760 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 356 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 12 ஆயிரத்து 912 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

வடமத்திய மாகாணத்திலும் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கமைய பொலநறுவையில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 340 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 473 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 12 ஆயிரத்து 284 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 223 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ 2 லட்சத்து 2 ஆயிரத்து 348 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 22 ஆயிரத்து 879 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஊவா மாகாணத்திலும் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.

அந்த வகையில் பதுளை மாவட்டத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 211 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ 2 லட்சத்து 51 ஆயிரத்து 706 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 14 ஆயிரத்து 806 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 814 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ 92 ஆயிரத்து 539 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 11 ஆயிரத்து 235 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்திலும் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 4 லட்சத்து 48 ஆயிரத்து 44 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ 2 லட்சத்து 64 ஆயிரத்து 503 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 18 ஆயிரத்து 887 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கேகாலையில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 484 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ 2 லட்சத்து 28 ஆயிரத்து 32 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 15 ஆயிரத்து 43 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்

மத்திய மாகாணத்தில் நுவரெலியா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களான கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.

அந்த வகையில் கண்டி மாவட்டத்தில் 4 லட்சத்து 71 ஆயிரத்து 502 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ 4 லட்சத்து 17 ஆயிரத்து 355 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 23 ஆயிரத்து 539 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்

மாத்தளை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 821 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ 1 லட்சத்து 34 ஆயிரத்து 291 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக்க 8 ஆயிரத்து 980 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post