யாழ். சங்கானையில் பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் 94வது அவதார தின நிகழ்வு.

                                                                                            (யாழ் லக்சன்)பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் 94வது அவதார தின நிகழ்வுகள் நாளையதினம் (23.11.2019) யாழ் சங்கானையில் அமைந்துள்ள சத்திய சாயி சேவா நிலையத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வுகளின் வரிசையில் நாளை காலை 4.45 மணியளவில் ஓம்காரம் சுப்ரபாதம் ,வேதபாராயணம், நகர சங்கீர்த்தனம் என்பன இடம்பெற்று காலை 6 மணியளவில் மங்கள ஆராத்தியுடன் காலை நிகழ்வுகள் நிறைவுபெறும்.

மாலை நிகழ்வுகளாக 3.15 மணியளவில் வேதபாராயணத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பஜனை காயத்திரி ஜெபம் என்பன இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து பாலவிகாஸ் மாணவர்களின் கலைநிகழ்வுகள் வறிய மாணவர்களுக்கான அன்புப் பொதிகள் வழங்கல், பாலவிகாஸ் மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்று அதனைத் தொடர்ந்து Dr.S.சிவகோணேசன் (சத்திய சாயி சேவா நிலையம், திருநெல்வேலி) அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்று இரவு 7.00 மணியளவில் மங்கள ஆராத்தியுடன் அவதார தின நிகழ்வுகள் நிறைவுபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post