கிழக்கு ஊடக அமையத்தின் முதற்கட்ட கல்வி,இயற்கை சார் பணிகள் முன்னெடுப்பு!!

உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் சமூகசேவைப் பயணம் வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தை நோக்கி அமைந்தது.

இந்த வித்தியாலயமானது அண்மைக் காலங்களில் சகோதர இனத்தில் மதிகெட்டு வாழும் சில விஷமிகளால் பல வகையிலும் பாதிக்கப்பட்ட எல்லையில் அமைந்துள்ள பாடசாலையாகும்.

இப்பாடசாலை இன்றும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பிலே கண்காணி க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப் பாடசாலை  அமைப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு "விதை ஒன்று நடின் அது விருட்சமாகி உன் சந்ததியை வாழ வைக்கும்" என்பதற்கிணங்க. கிழக்கு ஊடக அமையத்தின்  பங்களிப்பில் சுமார் 25 மரக்கன்றுகளை நேற்றைய தினம்(09/11/2019) நட்டு வைக்கப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான  வினாத்தாள்களையும் இலவசமாக  வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வினாத்தாள் வழங்கும் செயற்பாடனது தொடர்ந்து மிகவும் பின்தங்கிய ஐந்து  பாடசாலைக்கு உணர்வுள்ள உறவுகள் அமைப்பினால் வழங்கி வைக்கப்படவுள்ளது 

இந்த முதற்கட்ட நிகழ்விற்கு கலந்து கொண்ட அமைப்பின் நிருவாக உத்தி யோகத்தர்கள் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கிழக்கு ஊடக அமையம்
0/Post a Comment/Comments

Previous Post Next Post