கவிக்கோவின் தலைமையில் வெல்லவூர் சுபேதனின் "நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்" கவிதை நூல் வெளியீடு!!

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 10/11/2019 முற்பகல் 10:00 மணியளவில் வெல்லாவெளி சக்திகலாமன்றத்தின் வெளியீட்டில் தேசியக்கலைஞர் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களின் தலைமையில் சக்தி கலாமன்ற தலைவர் சமூர்த்தி உத்தியோகத்தர் திரு.செ.நவரெத்தினராசா அவர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்க வெல்லவூர் சுபேதனின் கன்னி வெளியீடாக "நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்" எனும் பெயர் பொறித்த கவிதை நூல் வெளியீடு வெல்லாவெளி கலாசார மத்திய நிலையத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. 

இந்த நிகழ்வுக்கு முதன்மை அதிதிகளாக வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.ராகுலநாயகி, சட்டத்தரணி. மு.கணேசராசா (ஆணையாளர் உள்நாட்டு இறைவரித்திணைக்களம்),திரு.W.M. ஆனந்தசிறி(பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி,வெல்லாவெளி) ஆகியோரும் முதன்மை பிரதியினை பெறுபவராக மட்டு தமிழ்சங்க தலைவர் சைவப்புரவலர் பிரபல தொழிலதிபர் திரு.வி.ரஞ்சிதமூர்த்தியும். 

கௌரவ அதிதிகளாக வெல்லாவெளி ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு.கருணேஸ்வரன், போரதீவுப்பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் ரி.அருள்ராஜா,கலாசார உத்தியோகத்தர் திரு.ச. சோமசுந்தரம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ம.தங்கையா,தொழில்நுட்பக்கல்லூரிபோதனாசிரியர்திரு.வ.மேகநாதன்,வெல்லாவெளி கலைமகள்.ம.வி அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி, வெல்லாவெளி கிராம சேவை அலுவலர் திரு.ப.இம்சன் ஆகியோரும் விசேட அதிதிகளாக.கவிஞர்.ஆ.சி.மூ.வேலழகன்,கவிஞர்.இ.வினாயகம்,கவிஞர்.ஆ.முல்லைத்திவ்யன்,திரு.எஸ்.விஜய்(உரிமையாளர்விஜய் அச்சுப்பதிப்பகம்,வவுனியா) 

சிறப்பு பிரதிகளை பெறுபவர்களாக கிழக்கு ஊடக அமையத்தின் சார்பாக அமையத்தின் உறுப்பினர் கவிஞர்.மட்டுநகர் கமல்தாஸ்,பற்றி நியூஸ் ஆலோசகர் திரு.வீ.ரவீந்திரமூர்த்தி ஆசிரியர்,ஈழக்கவி தெ.ரசிக்குமார்,திரு.க.கந்தப்போடி, கிராமிய பல்துறைக்கலைஞர் கலாபூஷணம் பூமலர் சிவராசா, இலக்கிய ஆர்வலர் திரு.இ.சபாநாயகம், முன்னாள் கிளை முகாமையாளர் ப.நோ.கூ.ச.திரு.ஆ.ஆனந்ததங்கராசா,வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலய பரிபாலனசபையின் ஆலோசகர் திரு.மா.அன்னகேசரி ஏனைய கிராம நலன்புரி அமைப்புகள், சங்கங்கள் என பலரும், சமூக நலன் விரும்பிகள்,பிரதேச இளைஞர் அமைப்புகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். 

இந்த கவிதை நூல் வெளியீட்டில் தமிழர் கலாசார முறைப்படி மங்கல விளக்கேற்றல்,இறைவணக்கம்,ஆசியுரையினை சிவஸ்ரீ சாம்பசிவக்குருக்கள் நிகழ்த்த அதன் பின்னர் தமிழ்மொழி வாழ்த்து,மாணவிகளின் வரவேற்பு நடனம் என ஆரம்பிக்கப்பட்டு வரவேற்பு உரையினை ஆசிரியர் இ.தனுராஜ் அவர்களும் தலைமையுரையினை கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களும் வெளியீட்டு உரையினை ஓய்வு நிலை அதிபர்.திரு.த.விவேகானந்தம் அவர்களும் நூல் நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் சு.வி.அ.க.நிறுவகம் திரு.க.மோகனதாசன் அவர்களும் ஏனைய அதிகள் உரைகளும் நூலாசிரியரை கௌரவிக்கும் நிகழ்வும் ஏற்புரையினை நூலாசிரியர் வெல்லவூர் சுபேதனும் நன்றியுரையினை ஓய்வு நிலை - பதவிநிலை உத்தியோகத்தர் சக்தி கலாமன்றத்தின் ஆலோசகர் திரு.மு.பேரின்பராசா அவர்கள் நிகழ்த்த நூல் வெளியீடானது சபை நிறைந்த மக்கள்,கலைஞர்கள்,பிரமுகர்கள், எனப் பலரின் வாழ்த்தொலிகளோடு இனிதே நிறைவு பெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post