சிறுபான்மை இன மக்கள் வாக்குகளை வழங்கவில்லை என்பதை காரணம் காட்டி அவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்க்க கூடாது;ஞானசார தேரர்!!


இந்த ஆட்சியாளர்களுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க எவரும் முயற்சிக்கக்கூடாது. தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி சிந்தித்து அவர்களுடன் பயணிக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளில் அவர் வெற்றி பெற்றார். .
ஆனால் அவர் வெறுமனே சிங்கள பெளத்த மக்களின் தலைவர் மட்டும் அல்ல. அவர் ஏனைய சகல இனங்களுக்கும் ஜனாதிபதி.

இந்த நாட்டில் பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் நாம் முஸ்லிம் சமூகத்துடன் முரண்பட அவசியம் இல்லை. நாம் எப்போதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக செயற்பட்ட நபர்கள். ஏனைய அப்பாவி முஸ்லிம் மக்களை நாம் எதிர்க்கவில்லை.

வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்பட முடியாது. அநாவசிய முரண்பாடுகளை ஏற்படுத்த நாம் தயாரில்லை. நம்பிக்கையை ஏற்படுத்தினால் மட்டுமே நாட்டை கொண்டு நடத்த முடியும். ஆகவே மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றால் இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post