உன்னை உனக்குள் சந்தித்திடவே குரு தேவை..!

அன்பார்ந்த ஆன்மீக இறையன்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எல்லாம்வல்ல குருவான இறைவனின் அருட்கடாட்சமும் ஆசீர்வாதமும் கிடைத்திட வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு மேற் கூறிய தலைப்பின் அர்த்தத்தினை மிகத்துல்லியமாக ஆன்ம விசாரணை செய்து உங்கள் பார்வைக்காக ஸ்ரீ பேரின்ப ஞான பீடம், ஸ்ரீ யோக ஞான பீடம்,ஸ்ரீ ஆத்ம ஞான பீடம் ஆகியவற்றின் ஸ்தாபகர் ஆன்மீகக்குரு மகா யோகி பகவான் புண்ணியரெத்தினம் சுவாமிகளின் ஞான அருள் உபதேசத் தொகுப்பினை வழங்குகிறோம்.

மனிதர்களாக இந்த பிரபஞ்சத்தில் பிறப்பெடுத்த நாம் நம்மால்(மனிதர்களால்) உருவாக்கப்பட்ட நவீன தொழில் நுட்ப சாதனங்களை அதன் செயற்பாடுகளை பார்த்து பார்த்து பிரமித்து அந்த பிரமிப்பிலேயே ஆழ்ந்து விடுகிறோமே அன்றி இத்தனையினையும் படைத்து அழகுபார்க்கும் மனிதனைப் பார்த்தோ மனிதனைப் படைத்த சக்தியினையோ எவரும் எண்ணிப்பார்ப்பதோ அல்லது தம்மைப்பற்றிய விசாரணையில் ஈடுபடுவதோ கிடையாது என்பதுதான் வேதனைக்குரிய விடயம்.

ஏன் மனிதர்களால் தன்னைப்பற்றியும் தன் உருவாக்கமான படைப்பின் கர்த்தாவைப் பற்றியுமோ சிந்திக்க முடிவதில்லை? காரணம் அவர்களின் சிந்தனையினை சிற்றின்பங்களான மாயை அதாவது உலகியல் பொருட்களின் மேல் கொண்ட மோகம் சிற்றறிவை தாண்டிய பேரறிவினை பற்றி சிந்திக்க விடுவதில்லை என்பதே பேருண்மை; மேடை போட்டு ஆன்மீகம் பற்றி பலர் பேசுவார்கள் "இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என ஆனால் அவர்களால் அவர்களுக்குள் இருக்கும் அந்த பரம்பொருளினை அறிய முடியாததும் அடைய முடியாமல் போனதுவும் ஏன் என வினவினால் அவர்கள் புறத்தோற்றத்தினை கண்டு அதிலே தமது மனதினை செலுத்தி லயித்து விட்டார்கள் அதனால்தான் என்னவோ அவர்களால் மேடையில் பேசும் அளவிற்கு தத்தமது செயலில் காட்டிட முடிவதில்லை.

இது ஒருபுறமிருக்க மக்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் மாத்திரமே நிரந்தரம் என நம்பி அதன்பால் பற்று வைத்து தமது அன்றாட கடமைகளில் அந்த பொருட்களுக்கு மிக முக்கிய இடத்தினை அதாவது வகிபாகத்தினை வழங்கி தம்மோடு பின்னிப் பிணைத்து வைத்துக் கொண்டு செயலாற்றுகிறார்கள் எப்போது வேண்டுமானாலும் அந்தப் பொருட்கள் இயங்கவோ அல்லது ஒத்துப்போகவோ மறுத்து சேதமடையும் போது, கவலையோ, துன்பமோ ஏற்படும் என அறியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

என்றோ ஒரு நாள் தம் வாழ்வோடு பிணைத்து வைத்துள்ள அந்தப் பொருட்களின் செயற்பாடு நிறுத்தப்படும்போதோ அல்லது பயன்படாது சேதத்திற்குள்ளாகும் போதோ அவர்கள் நொந்து போய் துஞ்சித்து முடங்கி விடுகிறார்கள் அவர்கள் தாம் பற்று வைத்திருந்த பொருளானது தமக்கு இத்தனை காலமும் ஒத்தாசை புரிந்ததும் அதன்பின்னர் அது இயங்க மறுத்தமையும் பற்றிய சிந்தனைகளே மனதை சுழற்சியாக கலங்கச் செய்து கொண்டிருக்கும் ஆக இவ்வாறுதான் மனிதர்கள் தாம் உருவாக்கிய தாமே தேடிக் கொண்ட அல்லது இணைத்துக் கொண்ட பிணைப்புக்களின் மேல் ஏதோ ஒரு எதிர்பார்ப்பினோடு வாழ்கிறார்கள் அவர்கள் எதிர்பார்த்த விடயங்கள் கிடைக்கும் போது குதூகலிக்கிறார்கள் கடவுள் இருக்கிறார் என கூறிக் கொண்டு திரிகிறார்கள் மாறாக எதிர்பார்ப்பான ஆசை நிராசையாகும் போது மனம் உடைந்து முடங்கிப் போகிறார்கள் அல்லது வாழ்க்கை வெறுத்துப் போய் அந்த வெறுப்பின் உச்சபட்சமாக இறைவன் உள்ளார் எனக் கூறிய அதே வாயினால் கடவுளே இல்லை என தூற்றுகிறார்கள் ஆக ஒருவரே இந்த செயலை சந்தர்ப்ப சூழ் நிலைக்கேற்ப தான் சார்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கேற்ப போற்றுகிறார் பின்னர் தூற்றுகிறார்.

ஏனெனில் நிலையற்ற பொருட்களை அல்லது சொந்தங்களை தன்னுடையது எனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி பற்றினை ஆழ வேரூன்ற செய்ததன் விளைவே அந்த வெறுப்பிற்கான காரணம் ஆனால் இவை அத்தனையினையும் கடந்து நான் எதற்காக பிறந்தேன்? நான் யார்? என மனிதர்கள் தங்களுக்குள்ளாகவே கேள்விகளை தொடுக்க முற்படுவார்களேயானால் அதற்கான விடையினை அவர்களாகவே அறிந்து தெளிந்து விடுவார்கள்; எதையெதையே கண்டு பிடிக்கிறோம் உருவாக்குகிறோம் அதையெல்லாம் கண்டு பிடித்த நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்னென்ன செய்தால் நான் எனக்குள் என்னை சந்தித்திடலாம்? என சொல்லி வழிகாட்டவும் தன்னை தனக்குள் சந்தித்த ஒருவர் வேண்டுமல்லவா!.

அது போலதான் ஆன்மீகப்பாதையில் பயணித்து இறை எனும் இலட்சியத்தோடு இரண்டறக் கலந்தவர்களை உலகின் செயல்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களது இலக்கிற்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் விரும்பும் வாழ்க்கை முறை எதுவோ அதனை மிகச் சிறப்பாக வாழ்வார்கள் ஆனால் அந்த சிறப்பினை தந்துதவும் பொருட்களின் மேல் பற்றற்று அவர்கள் வாழ்வார்கள் அதுதான் ஞானிகளையும் சித்தர்களையும் மக்களால் இலகுவில் இனங்கண்டு கொள்ள முடிவதில்லை சிலர் காடுகளில் அல்லது பிச்சை எடுத்து தன்னை உலகிற்கு வெளிப்படுத்தாமல் வாழ்வார்கள் சிலர் கார்,பங்களா என வாழ்ந்து வழிகாட்டி போதிப்பார்கள் உண்மை ஆன்மீகவாதிகள் விமானத்தினை கூட லாவகமாக ஓட்டுவார்கள் ஏனெனில் படைப்பாளியாக அவர்கள் மாறிவிட்டால் படைத்தவனுக்கு படைத்த பொருளின் அடிப்படை  தெரியாமலா இருக்கும்; சற்று சிந்தித்தால் தெளிவு கிடைக்கும்.

இவ்வாறு வழி காண்பிக்க வந்த ஞானிகளை சரணடைந்து உண்மையான இறை பக்தியும் நம்பிக்கையும் வைத்தால் பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த தத்துவத்தினை உணர்த்தி மனிதர்களான எம்மையும் வழிநடாத்தி இலக்கினை எட்டச் செய்து விடுவார்கள்.


மாறாக இலட்சியத்தினையும் அடைய வேண்டிய இலக்கினையும் மறந்து அதிலிருந்து விலகி செயற்படும் போது இருமனப் போராட்டத்தின் முடிவாக அவர்கள் தங்களின் செயலின்மேல் முழுக்கவனத்தினையும் திருப்பமுடியாமல் ஈற்றில் தோல்வியடைந்தவர்களாக சமூகத்தினால் நிராகரிக்கப்படுகிறார்கள்.

ஆக சாதாரண கல்விக்கே இத்தனை கோட்பாடுகள் எனில் நம்மை நமக்குள் சந்திக்கும் ஆன்மீகம் எனும் கல்விக்கு தன்னை உணர்ந்த ஒருவரால்தானே வழிகாட்ட முடியும் அவரையே ஆன்மீகக் குரு என்கிறோம்; குறிக்கோளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் அவ்வாறு நம்மால் அன்றாட வாழ்வில் நாம் எண்ணும் சிந்திக்கும் விடயங்களை ஒரு காகிதத்தில் குறித்து வைத்து விட்டு அமைதியாக அன்று இரவு உறங்கும் முன்னர் அதனை படித்துப் பார்ப்போமானால் நாம் எதிர்மறையான விடயங்களையே நம் மனதின் வெளிப்பாடாக குறித்து வைத்திருப்போம்; இப்போதுதான் நாம் மனதினை கவனிக்க தொடங்கியுள்ளோம் இத்தனைகாலமும் கொண்டதே கோலம் கண்டதே வாழ்வு என்று வாழ்ந்து விட்டோம் அதனால் நம் சூழல் சார் வாழ்வே நம்மையும் அல்லல்படுத்திக் கொண்டிருந்தது ஆனால் இப்போது அன்றாடம் எமது மனதினை கவனிக்க தொடங்கி விட்டோமல்லவா இனி படிப்படியாக நமது கவனம் எதிர்மறையான தீய எண்ணப்பிரவாகங்களை தவிர்த்து நல்லெண்ண பிரவாகத்தினை ஊட்டி வளர்த்திட திண்ணம் கொள்ளுவோம் அல்லவா ஒரு தாய் தன் குழந்தையினை எப்போதும் கவனித்துக் கொண்டே இருப்பாள் அவள் எந்தக் கடமையில் ஈடு பட்டிருந்தாலும் அடிக்கடி மனதில் ஒரு பக்கம் குழந்தையினை பற்றிய எண்ணம் நிலை கொண்டிருக்குமல்லவா.

அதே போலதான் நாம் நம் மனதினை கவனிக்கத் தொடங்கினால் எந்த செயலில் ஈடுபட்டாலும் மனம் எதை நினைக்கிறது என கவனித்து அங்கும் இங்கும் அலை பாய்ந்திடாமல் குறிக்கோளில் கவனத்தினை திருப்பிக் கொண்டே இருக்கலாம் உதாரணத்திற்கு திசை தெரியாமல் பயணிக்கும் கப்பலின் சுக்கானை மாலுமி கைப்பற்றி திசையறிந்து பயணிக்கச் செய்திடுவதனைப் போன்று ஆன்மீகக் குருவினை சரணடைந்து மனம் எனும் சுக்கானை அந்த குருவிடம் பரிபூரணமாக ஒப்படைத்து விட்டோமானால் நமது உடல் எனும் கப்பலின் வாழ்க்கைப் பயணமானது திசையறிந்து உலக துன்பங்கள் எனும் பேரலைகள் பனிமலைகள் இயற்கை சீற்றங்கள் என எதுவுமே பாதிக்காத வண்ணம் மாலுமியான குருபகவான் ஓட்டிச் சென்று இலக்கினை அடையச் செய்திடுவார் இலக்கினை அடைந்த நாம் அந்த இலக்கானதுதான் ஆன்மா அதை நோக்கி பயணிப்பதுதான் ஆன்மீகம் அந்த ஆன்மாதான் குரு அவர்தான் நாம்; கடவுளும் நாமும் வேறில்லை எனும் பேருண்மையினை அறிந்து உணர்ந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்தோடு இரண்டற கலந்திடலாம். 

 கடந்த பௌர்ணமி தின மகா யாகத்தில் ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள்
இந்த நிகழ்வு எப்பேற்பட்டதெனில் கல்வி கற்க பாடசாலை செல்லும் போது அடம்பிடித்து கல்வி கற்க மறுத்து அழுவது போலவும் பின்னர் மீண்டும் மீண்டும் தாயினதோ தந்தையினதோ தேற்றுதல்களின் பின்னர் சமாதானமடைந்து கற்பதற்கு உடன்பட்டு பாடசாலை சென்று குறித்த ஆசிரியரின் மேல் நம்பிக்கை கொண்டு அவரையே பின்பற்றி அவர் கூறுவதை கடைப்பிடித்து பரீட்சையில் சித்தியடைந்து அவரைப் போல ஆசிரியராக அல்லது அவருக்கும் மேலான வைத்தியரோ பொறியியலாளரோ ஏனைய உயர் பதவிகளை வகிப்பதனைப் போன்றதாகும்; கற்றலில் தேர்ச்சி பெற்றதும் அவர்கள் மாணவர் எனும் நிலையினை கடந்து ஆசிரியர் எனும் நிலையினை அடைந்து ஆசிரியத்துவம் பற்றிய அறிவினைப் பெறும் போது உடல் வேறாக இருந்தாலும் கற்பித்தல் எனும் ஒரேயொரு செயல்தானே இடம்பெறுகிறது இங்கே வேற்றுமையினை காணமுடியுமா? அதே போல்தான் மேற்கூறிய ஆன்மீக நிகழ்வும்.

அப்பேற்பட்ட குருவும், அவர் ஞான உபதேசமும், அவரின் நேரடி வழிகாட்டலும் கிடைக்கப்பெற்ற நாம் பல கோடி புண்ணியம் செய்தவர்கள் ஆகிறோம் ஏனெனில் நாம் மற்றும் நமது மூதாதையர்கள் செய்த புண்ணிய பலன்களே இன்று பகவான் புண்ணியரெத்தினம் சுவாமிகள் எனும் நாமத்தை சூடியவாறு நம் கண்முன்னே வீற்றிருந்து குருவாகி அருள்வழி காண்பித்து வருகிறார் இந்தப் பேருண்மையினை உலக மாந்தர்கள் இன்னமும் அறியாமல் அறிவிலிகளாக அல்லலுற்றுக் கொண்டிருக்கிறார்கள் "எழுத்தறிவித்தவன் இறைவன்" அந்த இறைவனையே காண்பிக்கும் குரு பகவானின் திருப்பாத கமலங்களில் தஞ்சமடைந்து நம்பிக்கை வைத்து பரிபூரண சரணாகதியடைவோமானால் இயற்கை தலை வணங்கும் மரண தேவன் அருகே வர அனுமதி கேட்பார் உலகில் என்னென்ன முதல்தரமாக இருக்கிறதோ அத்தனையினையும் எந்த வித தடையுமின்றி முதல்தரமாக அனுபவித்து இறை சாயுச்சிய நிலையான நம்மை நமக்குள் சந்தித்திடும் அற்புத நிகழ்வினை ஞானத் தந்தை ஞான வள்ளல் சற்குரு பகவான் நிட்சயமாக நிகழ்த்திக் காண்பிப்பார் என்பது திண்ணம்.


"வாழ்க வளமுடனும் நலமுடனும்"
ஸ்ரீ பேரின்ப ஞான பீடம்
பெரிய உப்போடை வீதி-07
மட்டக்களப்பு
இலங்கை

No comments

Powered by Blogger.